அட கொடுமையே! பெண்கள் ஆண் மருத்துவர்களை அணுகக்கூடாது: தாலிபான்கள் உத்தரவு!

ஆப்கானிஸ்தானில் கடந்த 2021-ம் ஆண்டு தாலிப்பான்கள் ஆட்சியை கைப்பற்றினர். அதே சமயம் பல்வேறு பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு பல்வேறு சட்டத்திருத்தங்களை தாலிப்பான்கள் கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக பெண்களில் உரிமை மற்றும் கல்வியறிவு போன்றவைகளை தாலிப்பான்கள் தொடர்ந்து தடை விதித்து வருகின்றனர். அந்த வகையில் ஆப்கானிஸ்தானில் பெண்கள் தங்களுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டால் ஆண் மருத்துவரிடம் அணுக கூடாது என தெரிவித்துள்ளனர்.

அடி தூள்!! போக்குவரத்துக்கழக பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை அறிவிப்பு!!

இதற்கு பதிலாக பெண் மருத்துவர்களை மட்டுமே அணுக வேண்டும் என்றும் இதனை ஒவ்வொரு மருத்துவ மனையும் கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

ஏற்கனவே உடற்பயிற்சி, கல்வி, பொழுதுபோக்கு, பயணம் போன்ற உரிமைகள் அந்நாட்டில் பெண்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இத்தகைய உத்தரவிற்கு ஆப்கானிஸ்தான் பெண்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.