
News
இனி பெண்களுக்கு நைட்-ஷிப்ட் கிடையாது: வெளியானது அதிரடி அப்டேட்!!
பெண்களுக்கு இனி கட்டாய நைட் சிப்ட் கிடையாது என உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சமீபத்தில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் பதவி ஏற்றவுடன் பல்வேறு நலத்திட்டங்களை செய்துவருகிறார். குறிப்பாக பெண்களுக்கு பல நலத்திட்டங்களை செய்து வருகிறார்.
அந்த வகையில் அம்மாநிலத்தில் மாலை 7 மணிக்கு மேல் அதிகாலை 6 மணிக்குள் பெண்கள் கட்டாய நைட் சிப்ட் வேலைசெய்வதற்கு தடை என யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
அதே சமயம் பெண்களுக்கு விருப்பம் என்ற அடிப்படையில் வேலை செய்ய நினைத்தால் அவர்களுக்கு தேவையான உணவு, பாதுகாப்பான போக்குவரத்து போன்ற அடிப்படை வசதிகளை நிர்வாகம் செய்து தர வேண்டுமென கூறியுள்ளார்.
மேலும், இந்த அறிவிப்பை காரணம் காட்டி பெண் தொழிலாளர்களை நிறுவனங்கள் பணியில் இருந்து நீக்கம் செய்யக்கூடாது என்றும் எச்சரித்துள்ளார். அதோடு இந்த அறிவிப்பை பின்பற்றாத நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். இத்தகைய அறிவிப்பு அம்மாநிலத்தில் உள்ள பெண்களுக்கு மிகவும் வரவேற்க உடையதாக அமைந்துள்ளது.
