இனி இந்திய ராணுவத்தில் பைலட்டுகளாக பெண்கள் நியமனம்!: ராணுவ தலைமை தளபதி;

கடந்த இரண்டு நாட்களாகவே இராணுவத்தளபதி நரவானே பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். முதலாவது 14 கட்டமாக நடைபெற்ற இந்தியா-சீனா இடையேயான பேச்சுவார்த்தை குறித்து கூறியிருந்தார். அதன் பின்னர் இன்றைய தினம் இந்தியாவிற்குள் நுழைய 400 பயங்கரவாதிகள் காத்திருக்கின்றனர் என்றும் கூறியிருந்தார்.

இந்த நிலைமையில் இனி இராணுவத்தில் பைலட்டுகளாக பெண்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்று ராணுவ தலைமை தளபதி நரவானே கூறியுள்ளார். அதன்படி இந்திய ராணுவத்தில் விமானம் ஓட்டும் விமானிகள் பெண்கள்  நியமிக்கப்படுவர் என்று ராணுவ தலைமை தளபதி நரவானே கூறினார்.

தேசிய பாதுகாப்பு அகாடமி மூலம் இந்த ஆண்டு பெண் அதிகாரிகளுக்கு பைலட் பயிற்சி அளிக்க அளிக்க முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது என்றும் ராணுவ தலைமை தளபதி நரவானே கூறினார். இந்திய ராணுவத்தில் அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு சமவாய்ப்பு அழைக்க அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் ராணுவ தலைமை தளபதி நரவானே கூறினார். ராணுவத்தில் தற்போது பெண்களுக்கு உயர் பதவிகள் மட்டுமின்றி பெரிய பொறுப்புகளும் அளிக்கப் படுகின்றன என்றும் நரவானே கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment