ஆண்களுக்கு நிகராக குடிப்பழக்கத்திற்கு அடிமையாகும் பெண்கள்… வெளியான அதிர்ச்சி தகவல்…..

மதுபானம் அதாவது ஆல்கஹால் ஒருவித போதை நிலையில் நம்மை வைத்திருக்கும் இந்த பானங்கள் தற்போது அல்ல. மன்னர்கள் காலத்தில் இருந்தே உள்ளது. ஆனால் தற்போது இது பல வகைகளில் கிடைக்கிறது. அதிக மன அழுத்தத்தில் இருக்கும் ஆண்கள் அல்லது தினமும் கடினமாக உழைக்கும் ஆண்கள் உடல் வலியை மறக்க இவற்றை அருந்துகிறார்கள்.

பொழுதுபோக்கிற்காகவும், குடிக்கும் நபர்களும் உள்ளனர். ஆணால் பெரும்பாலும் ஆண்கள் தான் குடிப்பார்கள். பெண்கள் குடிப்பார்கள் ஆனால் அந்த அளவிற்கு கிடையாது என்று நாம் நினைத்து கொண்டிருக்கிறோம். அது உண்மை கிடையாதாம். சமீபகாலமாக ஆண்களுக்கு இணையாக பெண்களும் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி வருகிறார்களாம்.

இந்நிலையில் தான் பெண்கள் அதிகமாக குடிப்பதற்கு காரணம் என்ன? என்று அமெரிக்காவில் உள்ள அரிசோனா ஸ்டேட் பல்கலைக்கழக உதவி ஆராய்ச்சி பேராசிரியை, ஜூலி பேட்டக்-பெக்கம், ஆய்வு ஒன்றை செய்துள்ளார். அதற்காக, ஒரு பரிசோதனை ஆய்வகத்தில் பணியாளர்கள், நாற்காலிகள் மற்றும் உரையாடல்களுடன் ஒரு அமைப்பை ஏற்படுத்தி, அதில் 105 பெண்களும் 105 ஆண்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர்.

இந்த ஆய்வில், பங்கேற்றவர்கள் மன அழுத்தம் உள்ள நிலையில் மற்றும் மனஅழுத்தம் இல்லாத நிலையில் எவ்வளவு குடிக்கிறார்கள்? என்ற வகையில் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து சுமார் ஒன்றரை மணி நேரங்கள் எந்தவித தடையும் இல்லாமல் அவர்கள் அனைவரும் மதுபானம் மற்றும் குளிர்பானம் அருந்த அனுமதி வழங்கப்பட்டது.

இந்த ஆய்வில் முதலில் சாதாரண சூழலில் மதுபானம் அருந்திய ஆண்கள், மன அழுத்த சூழலில் குளிர்பானம் கலந்து மதுபானம் எடுத்துக் கொண்ட ஆண்களை விட அதிகமாக குடித்திருக்கிறார்கள். ஆனால் பெண்கள், குளிர்பானம், மதுபானம் என எந்தவித வேறுபாடுமின்றி, மன அழுத்த சூழலில் மிக அதிகமாக மதுபானங்களை குடித்திருக்கிறார்கள் என்று தெரியவந்து உள்ளது.

இதுதவிர பெண்களை விட அதிகமாக ஆண்கள் மதுபானம் அருந்துவதும் தெரியவந்துள்ளது. இருப்பினும் பெண்கள் எளிதில் மதுவிற்கு அடிமையாகி விடுகிறார்கள் என்றும், அதிகமாக மதுபானம் அருந்தும் பெண்கள், அதிக ஆபத்துகளில் மாட்டிக்கொள்கிறார்கள் எனவும் கூறப்பட்டிருக்கிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment