Connect with us

பெண்களுக்கும் அனுமதி: மத்திய அரசு அதிரடி முடிவு!

News

பெண்களுக்கும் அனுமதி: மத்திய அரசு அதிரடி முடிவு!

6b6f9d7b8e7bfa56fc0e8aa84930a815

தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் கடற்படை அகாடமி தேர்வு மூலம் பாதுகாப்பு படை நிரந்தர கமிஷனுக்கு பெண்களையும் நியமிக்க மத்திய அரசு அதிரடியாக முடிவு எடுத்துள்ளது. இது குறித்து உச்சநீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ள மத்திய அரசு, தேசிய பாதுகாப்பு அகாடமியில் பெண்களையும் சேர்க்க முடிவு செய்துள்ளதாகவும் முப்படை தளபதிகளுடன் அடுத்தகட்ட ஆலோசனைக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது

இதனை அடுத்து இராணுவத்தில் சேர இனி பெண்களும் தேர்வு எழுதலாம் என்பது குறிப்பிடத்தக்கது. யுபிஎஸ்சி ஒவ்வொரு ஆண்டும் தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்வை நடத்தி வருகிறது. இந்த தேர்வை எழுத பெண்களுக்கு அனுமதி வேண்டும் என ஏற்கனவே உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

இந்த நிலையில் தேசிய பாதுகாப்பு அகடமி தேர்வு எழுத பெண்களை அனுமதிப்பது தொடர்பாக மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையின் போது பெண்களையும் தேர்வு எழுத அனுமதிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top