Connect with us

13 ஆண்டுக்கு முன்பு காதலித்த பெண்; தகராறில் பெண்ணின் உறவினர் கொலை!!

murder

Tamil Nadu

13 ஆண்டுக்கு முன்பு காதலித்த பெண்; தகராறில் பெண்ணின் உறவினர் கொலை!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் காதல் திருமணத்திற்கு எதிர்ப்புகள் அதிகரித்து வருகிறது. மேலும் தினந்தோறும் ஜாதி மறுப்புத் திருமணம் செய்தால் குடும்பத்தில் தகராறு ஏற்படுகிறது. இந்த தகராறு உச்சகட்டமாக கொலையும் ஆங்காங்கே நிகழ்கிறது.

இந்த நிலையில் காதல் தகராறில் பெண்ணின் உறவினர் கொலை செய்யப்பட்டுள்ளார். பொன்னேரி அருகே காட்டூரில் காதல் தகராறு காரணமாக 55 வயது மதிக்கத்தக்க ஜீவானந்தம் என்பவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

ஜீவானந்தத்தின் தங்கை மகளை 13 ஆண்டுக்கு முன் முத்து என்பவரின் தம்பி கண்ணன் காதலித்துள்ளார். காதலித்த பெண்ணை வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைத்தால் 13 ஆக இருந்த மோதல் கொலையில் முடிந்தது.

பெண் தனது கணவருடன் ஊருக்கு வந்தபோது கண்ணனின் அண்ணன் முத்து தகராறில் ஈடுபட்டுள்ளார். பெண்ணிடம் தகராறில் ஈடுபட்டது குறித்து முத்து வீட்டுக்கு சென்று கேட்டபோது உறவினர் ஜீவானந்தம் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

29 வயது முத்து ,36 வயது மதிக்கத்தக்க ராஜேஷ்குமார், 36 வயது மதிக்கத்தக்க நித்தியானந்தம் ஆகியோரிடம் காட்டூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in Tamil Nadu

To Top