கரலா கட்டை சுற்றுவதில் உலக சாதனை படைத்த பெண்….

ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு துறையில் அல்லது விளையாட்டில் திறமை வாய்ந்த நபர்களாக இருப்பார்கள். சிலருக்கு நல்ல வழிகாட்டி இல்லாததால் அவர்களின் திறமை வெளி உலகிற்கு தெரியாமல் போய் விடுகிறது. ஆனால் சிலர் அப்படி அல்ல சிறந்த வழிகாட்டி மூலம் அவர்களின் திறமையை நிரூபித்து சாதனை படைத்து வருகிறார்கள்.

அப்படி ஒரு உலக சாதனை படைத்தவர்களை பற்றி தான் தற்போது பார்க்க போகிறோம். புதுச்சேரி பூரணாங்குப்பம் பகுதியில் அமைந்துள்ள ஜோதி சிலம்பம் ஷக்திரிய குருகுலம் கடந்த 10 ஆண்டுகளாக மாணவர்களுக்கு போர்க்களத்தில் பயன்படுத்தப்படும் சிலம்பம், போர் சிலம்பம், குஸ்தி, குத்துவரிசை, தட்டுவரிசை, அடிவரிசை, மல்யுத்தம், வர்மக்கலை, தரைப்பாடம், உடற்கட்டு பாடம் ஆகிய பாரம்பரிய கலைகளை கற்று தருகிறார்கள்.

இதுதவிர பாரம்பரிய கலைகளை பாதுகாக்கும் வகையில் ஆண்டுதோறும் உலக கரலாகட்டை தினத்தன்று உலக சாதனை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக உலக கரலாகட்டை தினம் மற்றும் உலக சாதனை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மும்பையைச் சேர்ந்த திரிஷா என்ற பெண் 2.600 கிலோ எடை கொண்ட கரலா கட்டையை இடுப்பு சுற்று என்ற முறையில் 30 நிமிடத்தில் 1,082 முறை சுற்றி உலக சாதனை படைத்துள்ளார். ஆணுக்கு பெண் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் விதமாக திரிஷாவின் சாதனை பார்க்கப்படுகிறது.

திரிஷாவை தொடர்ந்து ஹரிஹரன் என்ற இளைஞர் கெண்டைக்கால் சுற்று என்ற முறையில் 30 நிமிடத்தில் 1360 முறை சுற்றியும், சிலம்பாட்ட குருகுல நிறுவனர் கலைமாமணி ஜோதிசெந்தில்கண்ணன், உடும்பு சுற்று என்ற முறையில் 30 நிமிடத்தில் 1304 முறை சுற்றியும் உலக சாதனை படைத்தார்கள். கரலா கட்டை சுற்றுவதில் பெண் உட்பட இரண்டு பேர் உலக சாதனை படைத்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment