
தமிழகம்
சந்தேகத்தின் உச்சம்;; இரண்டாவது கணவரால் அடித்துக் கொல்லப்பட்ட பெண்!!
பல குடும்ப பிரச்சினைகளுக்கு காரணம் சந்தேகம். ஒரு சில நேரங்களில் இந்த சந்தேகம் கைகலப்பில் முடியும். அதையும் தாண்டி தமிழகத்தில் கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகிறது.
குடும்ப பிரச்சினையால் தற்கொலை மற்றும் கொலைகளும் அதிகரித்து வந்துள்ளன. அந்த வகையில் தனது இரண்டாவது கணவரால் பெண் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு உண்டாக்கி உள்ளது.
அதன்படி சென்னையை அடுத்த மறைமலைநகர் அருகே ஜோதி என்றவர் வசித்து வருகிறார். இவரை அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் இரண்டாவது கணவர் முனுசாமி காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
முதல் கணவர் இறந்த பிறகு முனுசாமி என்பவருடன் வாழ்ந்து வந்தார் ஜோதி. மணி என்பவருடன் ஜோதிக்கு தொடர்பு ஏற்பட்டதாக கூறி அவரை சுத்தியலால் அடித்து கொலை செய்தார் இரண்டாவது கணவர் முனுசாமி. இது தொடர்பாக அக்கம் பக்கதிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
