கர்ப்பமாக இருப்பதையே தெரியாமல் இருந்த பெண் ஒருவர் விமான பயணத்தின் போது திடீரென பிரசவ வலி எடுத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஈக்குவடார் நாட்டைச் சேர்ந்த தமரா என்ற பெண் விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்தார். திருமணமான அந்த பெண் தான் கர்ப்பமாக இருப்பது தெரியாமல் விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்தார்.
அப்போது திடீரென அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டது. இதனை அடுத்து அவர் கழிவறைக்கு சென்றபோது அங்கு எதிர்பாராத விதமாக குழந்தை பிறந்தது. இந்த குழந்தை பிறப்பதற்கு விமானத்தில் உள்ள பயணி ஒருவரும் உதவி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் விமானம் தரையிறங்கியதும் நெதர்லாந்தில் உள்ள மருத்துவமனையில் தமரா மற்றும் அவரது குழந்தை அனுமதிக்கப்பட்டதாகவும் தற்போது தாயும் சேயும் நலம் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.
திருமணமாகி சில ஆண்டுகள் ஆன தமரா கர்ப்பமாக இருப்பது தெரியாமல் இருந்துள்ளார். அவ்வப்போது வயிற்று வலி வந்தாலும் அவர் வேறு ஏதோ காரணத்தினால் வயிற்றுவலி என்று தவறாக புரிந்து கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் திடீரென விமானத்தில் அவர் குழந்தை பெற்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் விமானத்தில் தனக்கு பிரசவம் பார்க்க உதவிய மேக்ஸிமிலியோனா என்பவரின் பெயரையே தனது குழந்தைக்கு வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.