திருமண ரிசப்ஷன் மேடையில் உயிர் இழந்த பெண். பெற்றோர் செஞ்ச விஷயத்தால் நெகிழ்ந்துபோன உறவினர்கள்!

திருமண ரிசப்ஷனில் மூளைச் சாவு ஏற்பட்டு மணமகள் உயிர் இழந்த சம்பவம் உறவினர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கர்நாடகா மாநிலம் கோலார் அருகே உள்ள பகுதிதான் சீனிவாச புரம். இந்தப் பகுதியில் வசித்து வந்தவர்தான் சைத்ரா.

சைத்ராவிற்கு பெற்றோர் முன்னிலையில் திருமண நிச்சயதார்த்தம் மூன்று மாதங்களுக்கு முன்னர் நடைபெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து இந்த மாதம் 7 ஆம் தேதி திருமண தேதியும், 6 ஆம் தேதி திருமண ரிசப்ஷன் தேதியும் குறிக்கப்பட்டு இருந்தது.

6 ஆம் தேதி உறவினர்கள் சூழ திருமண ரிசப்ஷன் நடைபெற்றுள்ளது. மணமக்களுக்கு உறவினர்கள் தங்களது வாழ்த்துகளைக் கூறிக் கொண்டிருந்த நிலையில் சைத்ரா திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

இதனால் உறவினர்கள் பதறிப் போக, சைத்ராவை அவரது பெற்றோர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்துப் பார்த்து சைத்ரா ஏற்கனவே உயிர் இழந்துவிட்டதாகக் கூறியுள்ளனர்.

மூளைச் சாவு ஏற்பட்டு உயிர் இழந்ததாகக் கூற பெற்றோர் கதறி அழுதனர். மகள் உயிர் இழந்தநிலையில் அவரது உடல் உறுப்புகளைப் பெற்றோர் தானம் செய்துள்ளனர். பெற்றோரின் இந்த செயல் குறித்து உறவினர்கள் பாராட்டியுள்ளனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.