குளிர்பானத்தில் மயக்கமருத்து கொடுத்து பெண் பாலியல் பலாத்காரம்; சென்னையில் பரபரப்பு!!

தலைநகர் சென்னையை பொறுத்தவரையில் குற்றச்சம்பவம் என்பது தொடர்ந்து அதிகரித்து கொண்டே போகிறது. அந்த வகையில் குளிர்பானத்தில் மயக்கமருந்து கலந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை அடுத்த சோழவரம் பகுதியை சேர்ந்தவர் டெய்சி (வயது 42). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் (வயது 51) பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த சூழலில் சுரேஷ்-க்கு பணத்தேவை இருந்துள்ளதால் டெய்சியிடம் 3 மாதங்களில் பணத்தை திருப்பி கொடுத்து விடுவேன் என கூறி பணம் வாங்கி உள்ளார்.

செம்ம வைரல்! டெலிவரி ஊழியராக மாறிய சொமேட்டோ சி.இ.ஓ..!!

இந்நிலையில் நாட்கள் கடந்தும் பணம் திருப்பி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாக தெரிகிறது. இந்த சூழலில் சோழவரம் பெரியார் நகரில் தான் தங்கியிருக்கும் அறைக்கு தனியாக வருமாறு சுரேஷ் டெய்சியை அழைத்துள்ளார்.

இதனை நம்பி சென்ற டெய்சியை குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் வீடியோவாக எடுத்து பல முறை பணம் பரித்தாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் பணம் கொடுக்க மறுக்கவே டெய்சியின் மகனுக்கு வீடியோவை அனுப்பி உள்ளார்.

இலவச பொங்கல் வேட்டி,சேலைகள்: எங்கு உற்பத்தி தெரியுமா?

இதற்கிடையில் கடந்த 5-ஆம் தேதி அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதையடுத்து, தகவலறிந்த சுரேஷ் தலைமறைவாக இருந்துள்ளார். இந்த சூழலில் நேற்று காலை சுரேஷை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த செல்போனை பறிமுதல் செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.