கணவருக்கும் மாமியாருக்கும் சாப்பாட்டில் விஷம்.. இரட்டை கொலை செய்த பெண் கைது!

கணவருக்கு மாமியாருக்கும் சாப்பாட்டில் விஷம் வைத்து இரட்டை கொலை செய்த பெண்ணை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர்.

மும்பையைச் சேர்ந்த கமல்காந்த் என்பவருக்கு கவிதா என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் சமீபத்தில் கமல்காந்த் திடீரென வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு நடந்த சோதனையில் அவருக்கு ரசாயனம் கலந்த உணவு கொடுத்திருப்பதாக தெரியவந்தது. இதனையடுத்து அவர் சில நிமிடங்களில் இறந்து விட்டார்.

கைதுகமல்காந்த் மரணத்தில் மர்மம் இருப்பதாக போலீசார் சந்தேகம் அடைந்த நிலையில் அவரது குடும்பத்தினரிடம் குறிப்பாக மனைவியிடம் விசாரணை செய்தனர். அப்போது மனைவி கவிதா தான் அப்பாவி போல நடித்தாலும், போலீசார் விசாரணையில் அவர்தான் குற்றவாளி என்றும் அவர் தனது கணவருக்கு விஷம் கொடுத்து கொலை செய்தார் என்பதும் தெரியவந்தது.

கணவரை கொலை செய்துவிட்டு அவருடைய சொத்துக்களை அவர்கள் திட்டமிட்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் கவிதா மற்றும் அவரது கள்ளக்காதலன் ஆகிய இருவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கமல்காந்த் தாயாரும் இதே போன்று மர்மமான முறையில் மரணம் அடைந்ததால் அவரையும் கவிதா கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்துடன் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்த முயன்ற பெண்ணால் மும்பையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கணவன், மாமியார், கொலை,

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.