Connect with us

சுற்றி சுற்றி அடித்த சூறைக்காற்று;; மரம் சாய்ந்து பெண் பலி!!

death 1

செய்திகள்

சுற்றி சுற்றி அடித்த சூறைக்காற்று;; மரம் சாய்ந்து பெண் பலி!!

ஜூன் மாதம் தொடங்கினாலே தமிழகத்தில் காற்றுக் காலம் என்று அழைப்பர். இந்த நிலையில் தற்போது சென்னை வானிலை மையம் சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களில் அடுத்த இரண்டு மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளது.

இதன் விளைவாக சுற்றியுள்ள மாவட்டங்களில் சூறைக் காற்று வீசிக்கொண்டு வருகிறது. அதுவும் குறிப்பாக திருப்பத்தூர் மாவட்டத்தில் பலத்த சூறாவளி காற்று வீசிக் கொண்டு வருகிறது.

இந்த சூறைக் காற்றில் மரம் விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். அதன்படி திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே சூறைக்காற்றால் மரம் வேரோடு சாய்ந்து விழுந்து சரஸ்வதி என்ற பெண் உயிரிழந்துள்ளார்.

பட்டுவம் பட்டியில் சூறைக் காற்று வீசியதில் மரம் விழுந்து சரஸ்வதி உயிரிழந்துவிட்டார் கிராமிய போலீசார் விசாரணை நடத்தி கொண்டு வருகின்றனர். இதனால் சரஸ்வதியின் குடும்பத்தார் ஆழ்ந்த தூக்கத்தில் உள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top