
செய்திகள்
கனமழை எதிரொலி: கேரளாவில் நிலச்சரிவில் சிக்கி பெண் ஒருவர் பலி!!
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 4 நாட்களாக கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. இந்நிலையில் இடுக்கி மாவட்டத்தில் நேற்றைய முன்தினம் கனமழை பெய்தது. இந்த சூழலில் ராஜூ என்பவர் குடும்பத்துடன் அங்கு தங்கி வசித்து வந்துள்ளனர்.
அப்போது அதிகாலை 4 மணி அளவில் சமையல் செய்வதற்காக எழுந்த போது திடீரென எதிர்பாராத விதமாக மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் ராஜுனின் மனைவி புஷ்பா மண்சரிவில் சிக்கியதாக கூறப்படுகிறது.
இதனிடையே அவரது குடும்பத்தினர் புஷ்பாவை மீட்க முயற்சித்தபோது முடியாதபட்சத்தில் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். பின்னர் புஷ்பா சடலமாக மீட்கப்பட்ட நிலையில் இவரது உடலை அப்பகுதியில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் அப்பகுதியில் ஆங்காங்கே ஒரு சில பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
