மெட்ரோ ரயிலில் இருந்து இறங்க மறுத்த பெண்.. அதிகாரி எடுத்த அதிரடி நடவடிக்கை

மும்பை மெட்ரோ ரயிலில் ஏறிய பெண் ஒருவர் இறங்க மறுத்ததை அடுத்து மெட்ரோ ரயில் நிலைய அதிகாரி எடுத்த அதிரடி நடவடிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மும்பை மெட்ரோ ரயிலில் கூட்டமாக இருந்த நிலையில் ஒரு பெண் கடைசி நேரத்தில் ரயிலில் ஏறினார். அப்போது அவர் தானியங்கி கதவின் அருகில் நின்று கொண்டிருந்ததை அடுத்து தானியங்கி கதவு மூட முடியாமல் இருந்தது.

இதனை அடுத்து மெட்ரோ ரயில் நிலைய அதிகாரி அவரை இறங்குமாறு கூறினார். ஆனால் அந்த பெண் இறங்க மறுத்தார். தான் அலுவலகத்துக்கு அரசு அவசரமாக செல்ல வேண்டும் என்றும் இந்த ரயிலில் தான் செல்ல வேண்டும் என்றும் அடம்பிடித்தார்.

இந்த நிலையில் அவர் இறங்க மறுத்ததால் தானியங்கி கதவு மூடமுடியாததன் காரணமாக ரயில் கிளம்ப முடியாத நிலையில் இருந்தது. இதனை அடுத்து மெட்ரோ ரயில் நிலைய அதிகாரி அந்த பெண்ணை இறக்கி ரயில் எஞ்சின் டிரைவர் அருகில் உட்கார வைத்தார். அதன்பின் ரயில் கிளம்பியது.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.