ஒரு நியாயம் வேண்டாமா? உடல் எடை குறையவில்லை என்பதற்காக விவாகரத்து கேட்கும் பெண்..!

தனது உடல் எடையை குறைத்து தரவேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜிம் பயிற்சியாளர் ஒருவரை திருமணம் செய்து கொண்ட பெண் ஒருவர், ஒரு வருடம் ஆகியும் தனது உடல் எடையை தனது கணவர் குறைக்கவில்லை என்பதால் அவரிடமிருந்து தனக்கு விவாகரத்து வேண்டும் என்று நீதிமன்றத்தை நாடி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு ஜிம் பயிற்சியாளர் உடன் பழக்கம் ஏற்பட்டதை அடுத்து இருவரும் திருமணம் செய்து முடிவு செய்தனர். ஆனால் திருமணத்திற்கு முன்னர், தான் 75 கிலோ எடையுடன் இருப்பதாகவும், தன்னை ஒரு வருடத்திற்குள் உடல் எடையை குறைக்க உதவி செய்ய வேண்டும் என்றும் நிபந்தனை விதித்துள்ளார்.

ஜிம் பயிற்சியாளரும் ஓகே சொல்ல கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இருவருக்கும் திருமணம் நடந்தது. இந்த நிலையில் திருமணத்திற்கு பின்னர் மனைவியின் உடல் எடையை குறைப்பதற்காக கணவர் பயிற்சி அளித்த நிலையில், அவரது உடல் எடை குறையாமல் அதே 75 கிலோவில் தான் உள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த மனைவி தன்னை தனது கணவர் ஏமாற்றிவிட்டார் என்றும், உடல் குறைத்துக் காட்டுவதாக வாக்குறுதி அளித்துவிட்டு அவர் அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்றும் இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ள நான் இனியும் அவருடன் இணைந்து வாழ முடியாது என்றும் தனக்கு விவாகரத்து பெற்று தருமாறு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

இதனை அடுத்து இருவருக்கும் குடும்ப நலோசனை மையத்தின் சார்பில் மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது. கணவர் ஜிம் பயிற்சியாளர் தனது மனைவியுடன் சேர்ந்து வாழ விரும்புவதாகவும் இன்னும் கொஞ்சம் கால அவகாசம் கொடுத்தால் தன்னுடைய மனைவியின் உடல் எடையை குறைத்துக் காட்டுவதாகவும் வாக்குறுதி அளித்தார். ஆனால் மனைவியோ பிரிந்து வாழ்வதில் உறுதியாக இருக்கின்ற நிலையில் விவாகரத்து மனு ஏற்றுக்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் விவாகரத்து கேட்பதற்கான காரணத்தில் ஒரு நியாயம் வேண்டாமா? என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...