19 மாவட்டங்களில் இன்னும் 3 மணி நேரத்தில் மழை: வானிலை எச்சரிக்கை

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 19 மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தென்கிழக்கு வங்க கடலில் உருவான மாண்டஸ் புயல் சென்னைக்கு 620 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டிருக்கும் நிலையில் இந்த புயல் நாளை நள்ளிரவு கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

rainஇதன் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் இன்று கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

இந்த நிலையில் வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள மாண்டஸ் புயல் காரணமாக அடுத்த 3 மணி நேரத்தில் 19 மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.