Connect with us

ஊரடங்கு அறிவித்த ஒரு வாரத்திலேயே இவ்வளவு பேர் விதிமீறலா? கோடிகளை கடந்து வசூலிக்கப்பட்ட அபராதம்!

ஊரடங்கு

செய்திகள்

ஊரடங்கு அறிவித்த ஒரு வாரத்திலேயே இவ்வளவு பேர் விதிமீறலா? கோடிகளை கடந்து வசூலிக்கப்பட்ட அபராதம்!

ஊரடங்கு அறிவித்த ஒரு வாரத்திலேயே இவ்வளவு பேர் விதிமீறலா? கோடிகளை கடந்து வசூலிக்கப்பட்ட அபராதம்!

தமிழகத்தில் கடந்த வாரம் முதல் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த இரவு நேர ஊரடங்கு இரவு 10 மணிக்கு மேல் எந்த ஒரு கடையும் திறக்கக்கூடாது நிலைமை காணப்படுகிறது.

அதேவேளையில் இன்றைய தினமான ஞாயிற்றுக்கிழமை தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் சாலைகள், தெருக்கள், கடைகள் என அனைத்தும் வெறிச்சோடி நிலைமையில் காணப்படுகிறது. இவ்வாறு தமிழக அரசு உத்தரவிட்டு இருந்தாலும் ஒரு சிலர் அரசின் உத்தரவை மீறி செயல்படுகிறார்கள்.

அவர்கள் மீது தக்க நடவடிக்கைகள் மேற்கண்டபடுவதோடு மட்டுமல்லாமல் அபராதமும் விதிக்கப்படுகிறது. அந்த வரிசையில் தமிழகத்தில் ஒரே வாரத்தில் 3.45 கோடி அபராதம் வசூலிக்க பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு ஊரடங்கு மீறியதாக ஒரே வாரத்தில் ரூபாய் 3.45 கோடி அபராதம் வசூலிக்க பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் முகக்கவசம் அணியாத 1.54 லட்சம் பேர், இதர விதிகளை மீறிய 3472 பேரிடம் அபராத தொகை வசூலிக்க பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் அதிகபட்சமாக தலைநகர் சென்னையில் முக கவசம் அணியாத 43 ஆயிரத்து 417 நபர்களிடம் ரூபாய் 86 லட்சம் அபராதத் தொகை வசூலிக்க பட்டதாக தகவல் கிடைத்துள்ளது. கொரோனா விதிகளை மீறியதாக 254 குற்றவழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் 96 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக டிஜிபி கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top