Tamil Nadu
பணம் எடுக்க தடை: எஸ்பிஐ வங்கி அறிவிப்பால் பரபரப்பு!
எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு டெபாசிட் செய்யும் மெஷினில் இருந்து பணம் எடுக்க தடை விதித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
எஸ்பிஐ ஏடிஎம் டெபாசிட் மிசினில் பணம் எடுக்கும் வசதியும் உள்ளது. ஆனால் அதில் பணம் வெளியே வந்தவுடன் 20 விநாடிகளுக்குள் பணத்தை எடுக்கப்படாவிட்டால் சென்சார் அதனை கவனித்து மீண்டும் பணத்தை உள்ளே தள்ளி விடும். இதனை கவனித்த ஒரு சில கொள்ளையர்கள் சென்சாரை கையால் மறைத்து கொள்ளையர்கள் பணத்தை எடுத்து விடுகின்றனர். ஆனால் பணம் எடுக்க வில்லை என நினைத்து அந்த மெஷின் மீண்டும் வங்கி கணக்கில் பணத்தை வரவு வைக்கிறது. இப்படி ரூபாய் 30 லட்சம் வரை தமிழகம் முழுவதும் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது
இந்த நிலையில் எஸ்பிஐ ஏடிஎம்களில் உள்ள டெபாசிட் செய்யும் மிஷினில் நூதன முறையில் பணம் திருடப்பட்டதை அடுத்து டெபாசிட் செய்யும் ஏடிஎம்களில் பணம் எடுக்க தற்காலிகமாக தடை விதித்து எஸ்பிஐ நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் பணம் எடுக்கும் வசதியை அனைத்து வங்கிகளும் முடக்கம் செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
