ஆன்லைனில் பதிவு செய்தால் மட்டுமே நெல் கொள்முதல் என்ற உத்தரவை வாபஸ் பெறுக!: எதிர்க்கட்சித் தலைவர்;
தமிழகத்தில் வலிமையான எதிர்க்கட்சியாக காணப்படுகிறது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். இந்த அதிமுக கட்சியில் எதிர்க்கட்சித் தலைவராக காணப்படுகிறார் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
எடப்பாடி பழனிசாமி நாள்தோறும் தமிழக அரசின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் உன்னிப்பாக கவனித்து செய்தியாளர்கள் மத்தியில் தங்களது கருத்தினையும் கண்டனத்தையும் தெரிவிப்பார். அந்த வரிசையில் நெல் கொள்முதலை பற்றி எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டிக்கும் விதமாக கூறியுள்ளார்.
ஏனென்றால் சில நாட்களுக்கு முன்பு தமிழக அரசின் சார்பில் ஆன்லைனில் பதிவு செய்யும் விவசாயிகளிடமிருந்து மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்படும் என்று உத்தரவிட்டிருந்தது. அதன்படி ஆன்லைனில் பதியும் விவசாயிகளிடம் மட்டுமே நெல் கொள்முதல் என்ற உத்தரவை திரும்பப் பெறுக என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
தமிழகத்தின் முதுகெலும்பான விவசாயிகளின் உழைப்பிற்கு தகுந்த பலன் கிடைத்தே தீரவேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி கூறினார்.
ஆன்லைன் பதிவை கட்டாயம் ஆகாமல், பழைய நடை முறையை செயல்படுத்த உறுதி செய்ய வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
