இனி தமிழகத்தில் ஆன்லைன் தேர்வு கிடையாது நேரடி எழுத்துத் தேர்வு தான் என்று அனைத்து பட்டப்படிப்பு கல்லூரிகளும் அறிவித்திருந்தது. இதற்கு மாணவர்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவியது.
அதோடு மட்டுமில்லாமல் மதுரை, சிவகங்கை, திண்டுக்கல் போன்ற பகுதிகளில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதனால் 150 மாணவர்கள் மதுரையில் கைது செய்யப்பட்டனர். மூன்று பிரிவுகளின் கீழ் 710 மாணவர்கள் மீது வழக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மாணவர்கள் மீது போடப்பட்ட இந்த மூன்று வழக்குகளும் திரும்பப் பெறப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
அதன்படி ஆன்லைன் தேர்வு நடத்தக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளும் திரும்பப் பெறப்படும் என்று அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
உயர் கல்வி செமஸ்டர் தேர்வுகள் ஜனவரி 20ஆம் தேதிக்கு பின்னர்தான் நடத்தப்படும் என்று அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். ஆன்லைன் தேர்வுக்கு ஒரு மாதம் அவகாசம் கோரிய நிலையில் இரண்டு மாதம் அளிக்கப்பட்டுள்ளது என்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.