மக்கள் ஒத்துழைப்பு தந்தால் தான் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த முடியும்: ஸ்டாலின்

இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு மட்டுமல்லாமல் ஒமைக்ரான் பாதிப்பும் அதிகமாக பரவிக்கொண்டு வருகிறது. நம் தமிழகத்திலும் நாளுக்கு நாள் ஒமைக்ரான்  பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால் ஒவ்வொரு மாநில அரசும் பல்வேறு கட்டுப்பாட்டு விதிகளை அமல்படுத்தி கொண்டே வருகின்றன. இருப்பினும் ஒமைக்ரான் பாதிப்பு வேகமாகவே பரவுகிறது.

ஒமைக்ரான்  

இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த மக்கள் ஒத்துழைப்பு தேவை என்று மக்களிடம் கேட்டுள்ளார். மக்கள் ஒத்துழைப்பு தந்தால் ஒமைக்ரான்  பரவலை கட்டுப்படுத்த முடியும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் தான் நாம் கொரோனாவின் இரண்டாவது அலையில்  இருந்து மீண்டு வந்தோம் என்றும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். புத்தாண்டில் மகிழ்ச்சியாக இருப்பதைப் போல் பாதுகாப்பாகவும் மக்கள் இருக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழ்நாட்டு மக்களின் ஒவ்வொருவரின் உடல் நலமும் முதலமைச்சரான எனக்கு முக்கியம் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment