அடுத்த 3 மணி நேரத்தில் கொட்டப்போகும் கனமழை.. 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள ஏழு மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு தோன்றும் என ஏற்கனவே இந்திய வானிலை ஆய்வு மையம் கூறிய நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி வங்க கடலில் புதிய காற்றழுத்தம் ஏற்பட்டு விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து இந்த காற்றழுத்த தாழ்வு, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி புயலாக மாறுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாகவும் இதன் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் கடலோர பகுதிகளிலும், புதுவை மற்றும் தெற்கு ஆந்திர பகுதிகளிலும் மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Cycloneஇந்த நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள ஏழு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமாரி, திருநெல்வேலி, இராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய 7 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எனவே மேற்கண்ட 7 மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு புயலாக மாறினால் தமிழகம் முழுவதும் மீண்டும் சில நாட்கள் தொடர் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.