இன்னும் ஒரு மணி நேரத்தில் செங்கல்பட்டு, சென்னையில் மழை; 2 நாட்களில் தமிழகம் முழுவதும் மிக கனமழை!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக கனமழை அதிதீவிரமாக பெய்தது. இதன் விளைவாக தமிழகத்தில் உள்ள பெருவாரியான ஏரிகள், அணைகள் முழுவதும் நிரம்பின. இந்த நிலையில் இந்த வடகிழக்கு பருவமழை தற்போது தனது தீவிரத்தை குறைத்து பெய்து வருகின்றன.

வானிலை மையம்

சென்னை வானிலை ஆய்வு மையம்:

அதோடு மட்டுமல்லாமல் தமிழகத்தில் அடுத்த ஒரு மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதன்படி செங்கல்பட்டு, சென்னை மாவட்டத்தில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம்

இந்திய வானிலை ஆய்வு மையம்:

அதோடு மட்டுமல்லாமல் தமிழகத்தில் நவம்பர் 24ம் தேதி முதல் நவம்பர் 26 வரையிலான காலத்தில் முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதனால் தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை தீவிரம் குறைந்து பிறகு மீண்டும் மழை தீவிரம் வலுப்பெறும் என்று இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. தெற்கு அந்தமான் அதனை ஒட்டிய கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி அடுத்த ஐந்து நாட்களில் மேற்கு வட மேற்கு திசையில் நகரும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment