உஷாரய்யா! அடுத்த 1,2 மணி நேரத்தில் 5 மாவட்டத்தில் மழை பெய்ய வாய்ப்பு!

நம் தமிழகத்தில் நாள்தோறும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இவை கடந்த மாத இறுதியில் அடித்து பெய்து வருகிறது. ஏனென்றால் கடந்த மாத இறுதியில் தான் இந்தியாவில் வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கியது.

மழை

இதனால் தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் கனமழை தீவிரமடைந்து பெய்து வருகிறது. இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த ஓரிரு மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள் 5 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.

இந்த மழை வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் ஏற்படும் என்று வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. அதன்படி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ஓரிரு மணி நேரத்தில் ஐந்து மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.

அதன் வரிசையில் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment