இன்னும் 3 மணி நேரத்தில் சொல்லி அடிக்குப்போகுது மழை! 22 மாவட்டங்களுக்கு வார்னிங்!!

சில நாட்களுக்கு முன்பு வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கியது. இதனால் தென்னிந்தியாவின் பல மாவட்டங்களில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் கடலோரம் மற்றும் தென் மாவட்டங்களில் அதிக கனமழை பெய்து வருகிறது.

கனமழை

இதன் விளைவாக தமிழகத்தில் உள்ள அனைத்து அணைகளும் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது.அணைகளிலிருந்து உபரி நீரானது அதிக அளவில் வெளியேற்றப்படுகிறது.இதனால் கரையோர மக்களுக்கு தொடர்ந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கடலூர், விழுப்புரம், சென்னை,செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருப்பத்தூர், வேலூர் ஆகிய  மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வானிலை மையம்

திருவண்ணாமலை, கோயமுத்தூர், திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை ,விருதுநகர் ஆகிய  மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

கன்னியாகுமரி திருநெல்வேலி தூத்துக்குடி தென்காசி மற்றும் ராமநாதபுரம் ஆகிய தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment