இந்த 12 மாவட்டங்களில் இன்னும் 3 மணி நேரத்தில் மழை..!! அடித்துச் சொல்லும் வானிலை மையம்;
தற்போது தமிழகத்தில் சென்னை வானிலை ஆய்வு மையம் முக்கியமான அறிவிப்பு ஒன்றை கூறியது. அதன்படி தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.
அதுவும் குறிப்பாக தென் கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனால் கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசுவதால் மீனவர்களுக்கு எச்சரிக்கை ஒன்றினையும் கூறியுள்ளது.
இந்த நிலையில் குறிப்பிட்ட 12 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு வானிலை மையம் கூறியுள்ளது.
அதன்படி தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மேலும் விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, தேனி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
