Connect with us

#BREAKING வாகன ஓட்டிகளுக்கு பேரதிர்ச்சி… புதிய உச்சம் தொட்ட பெட்ரோல், டீசல் விலை!

petrol diesel 1200

News

#BREAKING வாகன ஓட்டிகளுக்கு பேரதிர்ச்சி… புதிய உச்சம் தொட்ட பெட்ரோல், டீசல் விலை!

#BREAKING வாகன ஓட்டிகளுக்கு பேரதிர்ச்சி… புதிய உச்சம் தொட்ட பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 76 காசுகளும், ஒரு லிட்டர் டீசல் 76 காசுகளும் உயர்ந்துள்ளது.

4 மாதங்களுக்கு மேலாக பெட்ரோல்-டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் நீடித்து வந்த நிலையில், கடந்த 22ம் தேதியில் இருந்து பெட்ரோல்-டீசல் விலை உயரத்தொடங்கி வருகிறது. எனினும் அப்போது, கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 115.62 டாலர் என்ற அளவில்தான் இருந்தது. இனிவரக்கூடிய நாட்களிலும் பெட்ரோல், டீசல் விலை உயரும் என சொல்லப்படுகிறது.

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினமும் மாற்றி அமைத்து வருகின்றன. அந்த வகையில் சென்னையில் கடந்த 10 நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 6 ரூபாய் 5 காசுகளும், டீசல் விலை 6 ரூபாய் 9 காசுகளும் உயர்ந்துள்ளன.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையில் மாற்றம், டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவற்றை அடிப்படையாக வைத்து பெட்ரோல்-டீசல் விலையில் மாற்றம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாற்றங்கள் இருந்த நேரத்தில் கூட, பெட்ரோல்-டீசல் விலையில் மாற்றம் செய்யப்படாமல் காணப்பட்டது. அப்போது கச்சா எண்ணெய் விலை ஒருபீப்பாய் 140 டாலராக இருந்தது.

சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 76 காசுகள் உயர்ந்து 107.45 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் 76 காசுகள் அதிகரித்து 97.52 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in News

To Top