Connect with us

கையில் செங்கோல்; வாயில் உறுதிமொழி! கட்டுமானத்துறையினருக்கு பாராட்டு!!

stalin new16

Tamil Nadu

கையில் செங்கோல்; வாயில் உறுதிமொழி! கட்டுமானத்துறையினருக்கு பாராட்டு!!

கையில் செங்கோல்; வாயில் உறுதிமொழி! கட்டுமானத்துறையினருக்கு பாராட்டு!!

நாள் தோறும் தமிழக முதல்வர் ஸ்டாலின் பரபரப்பான செயல்களை செய்து கொண்டே வருகிறார். அந்த வகையில் இன்று கட்டுனர் மாநாட்டை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன்படி சென்னை மாமல்லபுரத்தில் 30வது அனைத்து இந்திய கட்டுனர் மாநாட்டை தமிழகத்தின் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

அனைத்து இந்திய கட்டுனர் மாநாட்டை தொடங்கி வைத்த முதலமைச்சருக்கு வெள்ளியினாலான செங்கோல் வழங்கப்பட்டது. அப்போது பேசிய அவர் கட்டுமானத் துறைக்கு முதலமைச்சர் பாராட்டு தெரிவித்தார்.

நாட்டை கட்டமைப்பதில் ஒன்றிய மாநில அரசுகளுடன் கட்டுமானத்துறை கரம் கோர்த்து செயல்படுகிறது என்று கூறினார். வேலைவாய்ப்பு வழங்க உறுதுணையாக இருப்பது கட்டுமானத்துறை தான் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.

சென்னை கட்டுனர் சங்கம் மட்டுமே கிட்டத்தட்ட இரண்டு லட்சத்துக்கு அதிகமான வேலை வாய்ப்புக்களை வழங்குவதாக அறிகிறேன் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். கட்டுனர் சங்கம் விழா மேடையிலேயே சிமெண்ட் விலை குறைப்பு பற்றிய அறிவிப்பை வெளியிட்டவர் எனது தந்தை கலைஞர் என்றும் கூறினார்.

கொரோனா கால பாதிப்பிலிருந்து கட்டுமானத்துறை முழுமையாக மீளவில்லை என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார். இதனால் கட்டுமான துறையினருக்கு பல்வேறு சலுகைகளையும் இருந்த ஸ்டாலின் அறிவித்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in Tamil Nadu

To Top