இந்தியர்களுக்கு மட்டுமில்லை எல்லாருக்கும் வாழ்த்துக்கள்!!-தமிழக ஆளுநர்;

இந்தியாவிற்கு பெருமை அளிக்கும் விதமாக நிகழ்வு நாளைய தினம் தமிழகத்தில் நடைபெற உள்ளது. ஏனென்றால் தமிழகத்தில் முதல்முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது.

இந்த போட்டிக்காக வெளிநாட்டில் உள்ள வீரர்கள் அனைவரும் தமிழகத்திற்கு வந்துள்ளனர். போட்டி சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. நாளை தொடங்கி அடுத்த மாதம் வரை இந்த போட்டி நடைபெற உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இதற்கான ஏற்பாடுகள் சென்னை நெடுவே செய்யப்பட்டுள்ளன. அதிலும் நாளைய தினம் நான்கு மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் வீரர்களுக்கு தமிழக ஆளுநர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்க உள்ள நிலையில் தற்போது தமிழக ஆளுநர் ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார். செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் அனைத்து செஸ் வீரர்களுக்கும், குழு உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்கள் என்றும் ஆளுநர் ரவி கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment