வெற்றி வேட்பாளர்கள் பட்டாசு வெடிக்கத் தடை: மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு!!
சிவகங்கை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் கொண்டாட்டங்களில் ஈடுப்பட அனுமதி இல்லை என மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளனர்.
செய்தியாளர்களை சந்தித்த சிவகங்கை ஆட்சியர் மதுசூதன், மாவட்ட கண்காணிப்பாளர் சிவக்குமார் ஆகியோர் கூறியதாவது:
சிவகங்கை மாவட்டத்தில் 4 நகராட்சிகள் மற்றும் 11 பேரூராட்சிகளுக்கு நடந்த தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை காலை 8 மணி முதல் நடைபெறும் என்றும் முதலாவதாக தபால் ஓட்டுகள் எண்ணப்படும் என தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து மின்னனு வாக்குபதிவுகளில் எண்ணப்படும் என தெரிவித்த அவர் தேர்தலில் வெற்றி பெரும் வேட்பாளர்கள் வெற்றி கொண்டாட்டங்களில் ஈடுப்படுவதை விடுத்து அமைதியான முறையில் செல்லவும் , வெற்றி பெற்ற வேட்பாளர்கள் ஊர்வலமாக செல்லவும், பட்டாசு வெடிக்கவும் அனுமதி இல்லை என அவர்கள் தெரிவித்தனர்.
