மது பிரியர்களுக்கு ’செக்’…. நாளை டாஸ்மாக் கடைகள் இயங்காது !!
ஆண்டுதோறும் மாவீரர் ஜெயந்தி கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் நாளை (வியாழக்கிழமை) மாவீரர் ஜெயந்தியை சிறப்பாக கொண்டாட திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில் அனைத்து மது சில்லறை விற்பனை கடைகள், மதுக்கூடங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் நாளை மதுபானக்கடைகளை மூட வேண்டும் என அம்மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.
இவ்வாறு செய்யாமல் நாளை மதுக்கடைகளை திறந்திருப்பது தெரியவந்தால் மதுக்கடை மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு மட்டுமில்லாமல் மதுக்கடை உரிமம் தற்காலிகமாக நிறுத்தி வைத்தல் மற்றும் உரிமங்களை ரத்து செய்யப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயாசிங் கூறியுள்ளார்.
மேலும், நாமக்கல் மாவட்டத்தைப்போன்று ராணிப்பேட்டை மாவட்டத்திலும் மாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு அம்மாவட்ட ஆட்சியர் மதுபான கடைகளை மூட வேண்டும் என கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
