News
65 கிலோமீட்டர் வேகத்தில் காற்று! மீனவர்களுக்கு எச்சரிக்கை!!
தற்போது நம் தமிழகத்தில் கோடை காலம் இல்லை காற்று காலம் என்றே கூறலாம், அதன்படி தமிழகத்தில் பல பகுதிகளில் காற்றானது மிகவும் அதிகமாக அடிக்கப்படுகிறது. இதனால் வெப்பநிலை குறைக்கப்பட்டு அந்த பகுதியில் குளிர்ந்த வானிலை உருவாகிறது. இது மகிழ்ச்சியான சம்பவமாக காணப்படுகிறது. மேலும் தமிழகத்தில் கோடை காலத்தில் பல பகுதிகளில் கோடை மழை பெய்தது அதுவும் மனிதர்களுக்கும் நம் தமிழக மக்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தன. மேலும் இந்த காற்று காலம் ஆரம்பித்து விட்டால் தமிழக மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைவர்.
ஆனால் ஒரு சிலர் காற்றுக் காலம் வந்தால் அவர்களது வாழ்வாதாரம் பெரிதாக பாதிக்கப்படும். அவர்கள் யாரென்றால் கடலில் மீன் பிடிக்கும் மீனவர்கள் தான். ஏனென்றால் காற்று தொடங்கிவிட்டால் பெரும்பாலான கடலில் புயல் உருவாகலாம். மேலும் கடற்கரையில் காற்று சூறைக்காற்று வீசுவதால் அவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் . இதனால் அவர்கள் வருடத்தில் 100 நாட்களுக்கும் குறைவாகவே மீன்பிடிக்க செல்லும் பல நாட்களில் காலநிலை மாற்றத்தின் காரணமாகவும் அவர்களால் மீன்பிடிக்க செல்ல முடியாது.
இதனால் அவர்கள் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் நிலையில் தற்போது மேலும் வானிலை ஆய்வு மையமானது மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளது. மேலும் தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் மணிக்கு 65 கிலோமீட்டர் வேகத்தில் வரையிலான காற்று பலத்த காற்று போல் வீசக் கூடும் என்பதால் நீங்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளது. மேலும் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதா பகுதிகளுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.
