ரஜினி பட இயக்குனரின் அடுத்த படத்தில் யோகிபாபு ஹீரோவா?

48a780845dea70c4615a97af1e43f42c

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கபாலி மற்றும் காலா ஆகிய இரண்டு திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் ரஞ்சித் அடுத்ததாக ஆர்யா நடித்து வரும் சல்பேட்டா என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி இந்தப் படம் வெளியாக வாய்ப்பு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் தற்போது அடுத்ததாக அவர் இயக்கும் திரைப்படத்தில் யோகி பாபு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு ‘பொம்மை நாயகி என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு இதனை அடுத்து புதிய போஸ்டர் ஒன்றும் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

a43777e0f68dabceea7606dcab6b8d1c-1

சுந்தரமூர்த்தி இசையில் அதிசயராஜ் ஒளிப்பதிவில் உருவாகும் இந்த படத்தை ரஞ்சித்தின் நீலம் புரடொக்சன்ஸ் நிறுவனமே தயாரிக்கவுள்ளது என்பது குறிப்பிடதக்கது. ரஜினி போன்ற பெரிய ஸ்டார்களை இயக்கிய இயக்குனர் பா.ரஞ்சித்தின் அடுத்த படத்தில் யோகி பாபு ஹீரோவாக நடிக்க இருப்பது கோலிவுட் திரையுலகை ஆச்சரியப்படுத்தியுள்ளது

இந்த படத்தில் யோகிபாபு ஜோடியாக நடிக்க முன்னணி நடிகை ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும், இதுகுறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.