விஜய் நடிப்பில் நெல்சன் இயக்க இருக்கும் தளபதி 65 திரைப்படத்தின் படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பது தெரிந்ததே
இந்த படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்க இருப்பதாகவும் இந்த படத்தை தீபாவளி அன்று வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது
இந்த நிலையில் சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இந்த படமும் அதே தீபாவளி தினத்தில் வெளியாகும் என்று தெரிகிறது
விஜய் மற்றும் சூர்யாவின் திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாகி பல ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் மீண்டும் இருவரது திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
ஏற்கனவே விஜய்யின் மாஸ்டர் படத்துடன் சிம்புவின் ஈஸ்வரன் திரைப்படம் கடந்த பொங்கல் தினத்தில் மோதிய நிலையில் விரைவில் விஜய்யுடன் சூர்யா மோதும் நிலை ஏற்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்