தைவான் விவகாரம்: அமெரிக்கா-சீனா இடையே போர் வருமா?

தற்போது உலக நாடுகளுக்கு பெரும் அச்சத்தை கொடுக்கும் நாடாக சீனா உருமாறியுள்ளது. உலக நாடு மட்டுமின்றி வல்லரசு நாடாக உள்ள அமெரிக்காவுக்கும் பெரும் தொந்தரவாக உள்ளது. தைவான்

இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சீனா மீது ஆழமான கருத்தை கூறியுள்ளார். அதன்படி தைவான் மீது சீனா ஒருவேலை கை வைத்தால் அமெரிக்க களத்தில் இறங்கும் என்று கூறியுள்ளார். சீனா தாக்கினால் தைவானை பாதுகாக்கும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.

ஆனால் சீன அதிபர் ஜின்பிங் சீனாவுடன் நிச்சயமாகத் தைவான் இணைக்கப்படும் என்று கூறியுள்ளார். தைவான் மீது போர் விமானங்களையும் பறக்கவிட்டார். இந்த  தைவான் ஒரு தீவு நாடாகும். இந்த தைவான் முதலில் சீனாவிடம் இருந்தது.

அதன் பிறகு ஜப்பானின் வசம் சென்றது. அதன் பின்னர் மீண்டும் சீனாவிடமே தைவான் இருந்த நிலையில் தற்போது தனியாக பிரிந்து உள்ளது. இந்த நிலையில் தைவானுக்கு ஆயுதம் சப்ளை செய்வது அமெரிக்கா என்று தெரியவந்துள்ளது.

தைவான்  ஜனநாயக முறைப்படி தலைவர்களை தேர்வு செய்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. உலக வரலாற்றில் நாங்கள் சக்தி வாய்ந்த ராணுவம் என்று சீனா, ரஷ்யா மற்றும் பிற நாடுகள் எல்லாமே அறியும் என்று அமெரிக்கா கூறியுள்ளது.

தைவானுடன் ராஜாங்க தொடர்பு வைத்தால் சீனாவுடன் வைக்க முடியாது என்பது சீனவிதி. இதனால் அமெரிக்கா-சீனா இடையே பெரும் போர் உருவாக வாய்ப்புள்ளதாக காணப்படுகிறது.

தைவான் விவகாரம் சீனாவின் உள்நாட்டு விஷயம் என்றும் இதில் அமெரிக்கா தலையிட அனுமதி இல்லை என்றும் சீன அரசு கூறியுள்ளது. இவ்வாறு ஒருவேலை போர் வந்தால் சீனாவுக்கு நிச்சயமாக ரஷ்யாவின் ஆதரவு இருக்கும்.

அதேபோல் அமெரிக்காவுக்கு ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் ஆதரவு இருக்கும் என்பதும் கணிக்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment