ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு நாளில் ரயில் போக்குவரத்து இருக்குமா? பதில் தந்தது தெற்கு ரயில்வே!

ஜனவரி 9ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நம் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆயினும் அத்தியாவசிய தேவை பொருட்கள் போன்றவற்றிற்கு அனுமதிக்கப்பட்டுள்ளன. இந்த சூழலில் தமிழகத்தில் தற்போது இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது.

இரவு நேர ஊரடங்குகளிலும் பேருந்து போக்குவரத்து சேவை தொடர்ந்து இயங்கி  கொண்டுதான் உள்ளது. இந்த நிலையில் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு நாளான ஜனவரி 9ஆம் தேதி அன்று ரயில்சேவை இயங்குமா? என்ற குழப்பம் காணப்பட்டது.

southrn

அதற்கு பதிலளிக்கும் விதமாக தெற்கு ரயில்வே சில முக்கிய அறிவிப்புகளை கூறியுள்ளது. அதன்படி ஊரடங்கு நாளான ஜனவரி 9 ஞாயிற்றுக்கிழமையிலும் சென்னையில் புறநகர் ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே கூறியுள்ளது.

ஆயினும் கொரோனா கட்டுப்பாடுகளுடன் பயணம் மேற்கொள்ள ரயில் பயணிகளுக்கு தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை முதல் அரக்கோணம் வரை, சென்னை முதல் கும்மிடிபூண்டி வரை, சென்னை முதல் வேளச்சேரி வரை, சென்னை முதல் செங்கல்பட்டு வரை இயக்கப்படும் ரயில் சேவைகள் தொடர்ந்து ஊரடங்கு நாளிலும் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment