இந்திய அளவில் பெரும் கட்டுபாடு இருக்குமோ? இன்று மாலை பிரதமர் ஆலோசனை;

இந்தியாவில் எதிர்பாராத விதமாக மீண்டும் ஆட்கொல்லி நோயான கொரோனாவின் பாதிப்பு உச்சத்தை அடைந்துள்ளது. இதற்காக ஒவ்வொரு மாநில அரசும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. குறிப்பாக நம் தமிழகத்தில் இன்றைய தினம் முழு ஊரடங்கு அமலில் உள்ளது.

அதோடு மட்டுமில்லாமல் இரவு நேர ஊரடங்கு நம் தமிழகத்தில் சில நாட்கள் முன்புதான் அமல்படுத்தப்பட்டது.  இந்திய அரசாங்கமும் விமான நிலையங்களுக்கு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. குறிப்பாக சில நாடுகளை பட்டியலிட்டு அதனை ஆபத்திற்குரிய நாடுகளாக அறிவித்து உள்ளது.

இவ்வாறுள்ள நிலையில் கொரோனா காரணமாக பிரதமர் மோடி இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில் பிரதமர் மோடி இன்று மாலை ஆலோசனை மேற்கொள்கிறார். கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு குறைந்திருந்த நிலையில் சில நாட்களாகமீண்டும் அதிகரித்து வருவதால் இந்திய பிரதமர் மோடி இன்று மாலை ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் மூத்த அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்து கொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது. இன்று மாலை 04:30  மணிக்கு பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொள்கிறார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment