இன்றைய ஐபிஎல் போட்டி நடைபெறுமா? டெல்லி வீரருக்கு கொரோனா..!!

கடந்தாண்டு நம் இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி சற்று நிறுத்தி வைக்கப்பட்டதாக காணப்பட்டது. ஏனென்றால் கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டி நடந்து கொண்டிருக்கும்போதே வீரர்கள் பலருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியானது.

இதனால் இந்தியாவில் காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடத்தப்படவில்லை. அதன் பின்னர் செப்டம்பர் மாதம் ஐக்கிய அரபு அமீரகம் நாட்டில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

இந்த நிலையில் இந்த ஆண்டு எந்த ஒரு பாதிப்பும் இருக்காது என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது கொரோனா பாதிப்பு வீரர்களை தாக்கியுள்ளதாக தெரிகிறது. இதனால் இன்றைய ஐபிஎல் போட்டி நடைபெறுமா என்ற கேள்வியும் உருவாகியுள்ளது.

அதன்படி டெல்லியில் மேலும் ஒரு வெளிநாட்டு வீரருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. ரேபிட் பரிசோதனையில் கொரோனா  தொற்று உறுதியான நிலையில் RT-PCR பரிசோதனை முடிவுக்கு காத்திருக்கபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இன்று டெல்லி பஞ்சாப் அணியை எதிர்த்து விளையாட உள்ள நிலையில் வீரருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. ஏற்கனவே டெல்லி அணியை சேர்ந்த ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷ்க்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...