Connect with us

இலங்கையில் புதிய கூட்டணி அரசு அமைய உள்ளதா? தீவிர ஆலோசனை..!!

srilanka parliment

செய்திகள்

இலங்கையில் புதிய கூட்டணி அரசு அமைய உள்ளதா? தீவிர ஆலோசனை..!!

நேற்றைய தினம் இலங்கையில் திடீரென்று கலவரம் வெடித்தது. அதிலும் கலவரக்காரர்கள் அதிபர் மாளிகையை சூறையாடினர். இதனால் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே மாளிகையை விட்டு அதிகாரப்பூர்வமாக தப்பி ஓடினார்.

மேலும் நேற்று இலங்கை பிரதமர் தனது பதவி ராஜினாமா செய்வதாக அறிவித்திருந்தார். இதனால் இலங்கையில் புதிய கூட்டணி அரசு அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையில் அனைத்து கட்சியினரும் பங்கேற்கும் புதிய கூட்டணி அரசு அமைக்க ஆலோசனை நடக்கிறது. கொழும்புவில் அனைத்து கட்சி பிரதிநிதிகள் பங்கேற்ற சிறப்பு கூட்டம் இன்று நடைபெற்றது.

இலங்கை அதிபர் கோத்தப்பய பதவி விலகும் பட்சத்தில் அரசியல் வெற்றி இடத்தை சமாளிக்கும் வகையில் அனைத்து கட்சி கூட்டணி அரசு உருவாக உள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித், இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ராப் ஹக்கீம் சிலோன் மக்கள் காங்கிரஸ் ரிசாத் ஆலோசனை நடத்துகிறார்கள் .

ஒன்பது தேசிய கட்சிகள் கொண்ட மற்றொரு கூட்டணி ஆலோசனை கூட்டம் இலங்கை நெருக்கடி குறித்து ஆலோசனை என்ற தகவல் கிடைத்துள்ளது. இலங்கை அதிபர் கோத்தாபய, பிரதமர் ரனில் விக்ரமசிங்கே ஆகியோர் பதவி விலக கோரி மக்கள் புரட்சி வெடித்ததை அடுத்து அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top