மாதவரம் to சிப்காட் மெட்ரோ ரயில் வருமா? அப்போ ’ஐ.டி. ஊழியர்களுக்கு’ கொண்டாட்டம் தான் போல….

சென்னையில் முதல் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் நடைமுறைக்கு வந்ததையடுத்து 62 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் 2- ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 3 வழிதடங்களில் செயல்படுத்தப்படுகிறது. அவற்றில் மாதவரம் to சிப்காட் மெட்ரோ ரயில் வழித்தடமும் உண்டு. அந்த வழிதடங்களை குறைப்பது தொடர்பாக மாதவரம் to சோலிங்கநல்லூர் வரை மட்டுமே மெட்ரோ ரயில் திட்டத்தை செயல் படுத்த பரீலீனை செய்வதாக கூறப்படுகிறது.

அந்த பகுதியில் அதிகமாக ஐ.டி நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் உள்ளதால் தங்கள் பகுதியில் மெட்ரோ ரயில் திட்டத்தை கைவிடப்படும் என்ற செய்தியை அறிந்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பழைய ஓஎம்ஆர் சாலையான தற்போதைய ராஜீவ்காந்தி சாலை அகலமாக உள்ளதால் அங்கு உயர்த்தப்பட்ட வழித்தடமாக மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவது மிகவும் எளிதானது. மாணவர்கள் ஐடி ஊழியர்கள் போன்ற பிற தொழில்களை சார்ந்தவர்கள் அதிகமாக வந்து செல்வதால் சிப்கார்ட் மெட்ரோ ரயில் திட்டத்தை மாற்றம் இன்றி செயல் படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.

இதையடுத்து மூன்றாவது வழித்தடத்தை குறைக்கும் திட்டத்தை மெட்ரோ ரயில் திட்டம் கைவிட்டுள்ளது. ஏற்கனவே அறிவித்தப்படி மாதவரம் தொடங்கி சிறுசேரி சிப்காட் வரை மெட்ரோ ரயில் செயல்படுத்தும் பணிகள் துவங்கியுள்ளன. அதன் படி அந்த வழிதடத்தில் சோழிங்கநல்லூர் இருந்து சிப்காட் வரை 10 கி.மீ தூரத்திற்கு 957 கோடியில் உலகளாவிய டெண்டர் கோரப்பட்டுள்ளது.

இதவற்றின் மூலம் சோழிங்கநல்லூர் ஏரி, பொன்னியம்மன் கோவில், சத்யபாமா பல்கலை, செம்மஞ்சேரி, காந்திநகர், நாவலூர், சிறுசேரி, சிறு சிப்காட்-1, சிறு சிப்காட்- 2 ஆகிய இடங்கள் அடங்கும். இந்த திட்டத்தினால் வேலைக்கு செல்லும் ஐ.டி ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment