Tamil Nadu
அடுத்த மாதம் முதல் திரையரங்குகள் திறக்கப்படுகிறதா? முதல்வர் நாளை அறிவிப்பு!
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பாதிக்கப்பட்ட தொழில்களில் ஒன்று திரைஉலகம் என்பதும் குறிப்பாக திரையரங்கு உரிமையாளர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது
கடந்த ஆண்டு மார்ச் மாதம் மூடப்பட்ட திரையரங்கங்கள் இடையில் இந்த ஆண்டு சில மாதங்கள் மட்டும் திறக்கப்பட்டது என்பதும் அதன் பின்னர் மீண்டும் மூடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தற்போது கிட்டத்தட்ட அனைத்துமே இயல்பு நிலைக்கு வந்துவிட்ட போதிலும் திரையரங்குகள் திறப்பதற்கு மட்டும் இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை. இந்தநிலையில் நாளை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முக்கிய ஆலோசனை செய்ய உள்ளார்
இந்த ஆலோசனையின் போது அவர் பள்ளிகள் மற்றும் திரையரங்குகள் திறப்பது குறித்து மருத்துவ நிபுணர்களிடம் ஆலோசனை பெறுவார் என்றும் அதன்பிறகு திரையரங்குகள் திறப்பது குறித்த முக்கிய அறிவிப்பை அவர் வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அனேகமாக அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் இருந்து திரையரங்குகள் திறக்க அனுமதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
