தீபாவளிக்கு தியேட்டர்ஸ் திறக்கப்படுமா? அப்போ அண்ணாத்த, எனிமி நிலைமை?

தமிழகத்தில் தற்போது தான் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளது. இதனால் பல மாதங்களுக்குப் பின்பு தமிழகத்தில் திறக்கப்பட்டதால் மக்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்தோடு சென்று படங்களை கண்டு மகிழ்ந்தனர்.ஐகோர்ட் மதுரை

இதனைத் தொடர்ந்து வருகின்ற தீபாவளி அன்று திரையரங்குகளில் அண்ணாத்த, எனிமி போன்ற படங்கள் வெளியாக உள்ளன. மேலும் இவ்விரு படங்களும் தீபாவளிக்கு ரசிகர்களுக்கு மிகவும் விருந்தாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு எண்ணி இருக்கையில் தற்போது அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி தீபாவளி அன்று திரையரங்குகள்  திறக்கப்படுமா? என்ற கேள்வி உருவாகியுள்ளது. ஏனென்றால் தீபாவளியை ஒட்டி திரையரங்குகள் திறக்கக்கூடாது என்று பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது திரையரங்கில் 100 சதவீத இருக்கைகளுடன் இயங்க அனுமதித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  அவர் குறிப்பிட்ட மனுவில் நவம்பர் 3 மற்றும் 4ம் தேதிகளில் திரையரங்குகளை மூட உத்தரவிடக் கோரி பொதுநல வழக்கு தொடுத்துள்ளார் சிவமுருகன் ஆதித்தன்.

இதனால் தீபாவளி அன்று திரையரங்கு திறக்கப்படுமா என்ற கேள்வியோடு பலரும் காத்திருக்கின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment