பாஜக நிர்வாகிகள் மாற்றமா?-அண்ணாமலை தலைமையில் இன்று ஆலோசனை!

தற்போது நம் தமிழகத்தில் வளர்ந்து வரும் கட்சியாக மாறியுள்ளது பாரதிய ஜனதா கட்சி. ஏனென்றால் ஏப்ரல் மாத  சட்டப்பேரவை தேர்தல் மற்றும் பிப்ரவரி மாத நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது.

இந்த நிலையில் இன்றைய தினம் பாஜக நிர்வாகிகள் மத்தியில் ஆலோசனை நடைபெற உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஏனென்றால்  பாஜக நிர்வாகிகள் மாற்றம் நிகழலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்படி தமிழ்நாடு பாஜக மைய குழு  கூட்டம் அண்ணாமலை தலைமையில் சென்னையில் இன்று நடைபெறுகிறது. இந்தக் குழு கூட்டத்தில் தமிழக பொறுப்பாளர் சி.டி. ரவி, மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், மத்திய இணையமைச்சர் முருகன் உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.

பாஜகவில் சில பிரிவுகள் கூண்டோடு கலைக்கப்பட்ட நிலையில் அண்ணாமலை தலைமையில் இன்று ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனைக்கு பிறகு விரைவில் தமிழக பாஜக நிர்வாகிகள் மாற்றம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment