ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு: உணவகங்கள் திறந்திருக்குமா? எவற்றுக்கெல்லாம் அனுமதி?

தமிழகத்தில் ஜனவரி 9ஆம் தேதி முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறியிருந்தார். இந்த முழு ஊரடங்குபோது எவற்றுக்கெல்லாம் அனுமதி என்ற தகவல் கிடைத்துள்ளது. அதன்படி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு போது பொது போக்குவரத்து மற்றும் மெட்ரோ ரயில் போக்குவரத்து இயங்காது என்று தமிழக அரசு கூறியுள்ளது.

உணவகங்களில் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி அளித்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின். உணவு டெலிவரி நிறுவனங்களுக்கு காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மின் வணிக நிறுவனங்களுக்கு அனுமதி இல்லை என்று தமிழக அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.

9ஆம் தேதி மற்றும் வார நாட்களில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை வாடகை வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளருக்கு மட்டுமே தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. திருமண நிகழ்வுகளில் 100 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசு கூறியுள்ளது.

அனைத்து பொருட்கள் மற்றும் புத்தக கண்காட்சிகள் தற்போது ஒத்தி வைக்கப்பட்டதாக தமிழக அரசு கூறியுள்ளது. உணவகங்கள், தங்கும் விடுதி, பேக்கரிகளில் 50 சதவீதம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. துணிக்கடைகள், நகைக்கடைகளில் ஒரே நேரத்தில் 50 சதவீதத்தினர் மட்டுமே அனுமதிக்கவேண்டும் என்றும் கூறியுள்ளது.

விளையாட்டுகள், உடற்பயிற்சி கூடங்களில் ஒரே நேரத்தில் 50 சதவீதம் பேருக்கு மட்டுமே அனுமதி அளித்து தமிழக அரசு கூறியுள்ளது. யோகா பயிற்சி நிலையங்களில் ஒரே நேரத்தில் 50 சதவீதம் பேர் மட்டுமே அனுமதி என்று தமிழக அரசு கூறியுள்ளது. அழகு நிலையங்கள் போன்றவற்றில் ஒரே நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி அளித்துள்ளது தமிழக அரசு.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment