வலிமை படம் தியேட்டரில் வெளியாகுமா? வெளியாகாதா? வலிமைக்கு வந்த சிக்கல்…

மிகப்பெரிய இடைவெளிக்கு பின்னர் நடிகர் அஜித்தை பெரிய திரையில் பார்க்க போகும் மகிழ்ச்சியில் அஜித் ரசிகர்கள் உள்ளனர். ஆனால் அவர்களின் மகிழ்ச்சி நிலைக்குமா என்பதே கேள்விக் குறியாக உள்ளது. ஆம் வலிமை படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாம்.

வலிமை

இயக்குனர் வினோத்துடன் அஜித் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்துள்ள படம் தான் வலிமை. போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர் வீடியோ, ஃபர்ஸ்ட் சிங்கிள், சண்டைக் காட்சி மேக்கிங் வீடியோ என அனைத்துமே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

வலிமை படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளதால் ரசிகர்கள் குஷியில் இருந்தனர். மேலும் வலிமை படத்தின் டிரெய்லர் இந்த வாரத்தில் வெளியாக உள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் வலிமை படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது கொரோனா வைரஸை தொடர்ந்து ஓமைக்ரான் வைரஸ் தொற்று அதிகளவில் பரவ தொடங்கியுள்ளது. இதனால் மீண்டும் ஊரடங்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதுதவிர கர்நாடகா மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் தமிழகத்திலும் விரைவில் ஊரடங்கு அமலுக்கு வரலாம். அதனால் தியேட்டர்கள் மூடப்பட வாய்ப்புள்ளது என கூறி வருகிறார்கள். ஒருவேளை திரையரங்குகள் மூடப்பட்டால் வலிமை படம் ஓடிடியில் வெளியாகவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இதற்கான பதில் தெரிந்து விடும்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment