தமிழகத்தில் ஊரடங்கு தொடருமா? புதிய கட்டுப்பாடுகள் என்னென்ன?: நாளை முதல்வர் ஆலோசனை;

முன்பு கூறி இருந்தபடி தமிழகத்தில் இன்றைய தினம் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து பெருநகரங்களிலும் சாலைகள் வெறிச்சோடிய நிலையில் காணப்படுகிறது. அரசு கூறிய விதிகளை மீறி சாலைகளில் சுற்றித் திரிவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஆயினும் இந்த முழு ஊரடங்கு காலகட்டத்தில் திருமண நிகழ்ச்சிகளுக்கு செல்பவர்களுக்கு அனுமதி அளித்து தமிழக அரசு நேற்றைய தினம் அறிக்கை வெளியிட்டிருந்தது.இந்த சூழலில் இன்று ஒரு நாள் மட்டுமே தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அரசின் சார்பில் கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே நம் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு நடைமுறையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடு தொடர்பாக முதலமைச்சர் தலைமையில் நாளைய தினம் ஆலோசனை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏனென்றால் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நாளையுடன் நிறைவடைந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை மேற்கொள்கிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் நாளைய தினம் மதியம் 12 மணிக்கு அதிகாரிகள் மத்தியில் ஆலோசனை மேற்கொள்கிறார் தமிழகத்தின் முதல்வர் ஸ்டாலின்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment