Connect with us

கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தில் வரம்பு அதிகரிக்கப்படுமா? 2022-பட்ஜெட்டை நோக்கி காத்திருக்கும் விவசாயிகள்!

kcc2

செய்திகள்

கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தில் வரம்பு அதிகரிக்கப்படுமா? 2022-பட்ஜெட்டை நோக்கி காத்திருக்கும் விவசாயிகள்!

கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தில் வரம்பு அதிகரிக்கப்படுமா? 2022-பட்ஜெட்டை நோக்கி காத்திருக்கும் விவசாயிகள்!

இந்தியாவில் நாளுக்கு நாள் விவசாயிகளின் பிரச்சினை அதிகரித்து கொண்டே வருகிறது. அதுவும் குறிப்பாக ஓராண்டிற்கு மேலாக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் மேற்கொண்டிருந்தனர். ஏனென்றால் மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன் விளைவாக ஓரிரு மாதங்களுக்கு முன்பு மத்திய அரசு அறிவித்திருந்த வேளாண் சட்டங்களை வாபஸ் பெற்றது. இதனால் விவசாயிகள் சந்தோஷத்தில் இருந்தனர். அதோடு மட்டுமில்லாமல் நடக்க இருக்கின்ற 2022ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரில் விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்புகள் இருக்கும் என்றும் எதிர்பார்ப்புகள் காணப்படுகிறது,

அதோடு மட்டுமில்லாமல் கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தின் வரம்பு அதிகரிக்கக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கிரிடிட் கார்டு என்பது விவசாயிகளை கந்து வட்டி கொடுப்பவர்களிடமிருந்து விடுவிக்கவும், விவசாயத்திற்கு குறைந்த விலையில் கடனுதவி கிடைக்கும் தொடங்கப்பட்ட ஒரு சிறந்த திட்டமாகும்.

இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ரூபாய் 3 லட்சம் வரை கடன் கொடுக்கப்படுகிறது. இதனால் 2022ம் ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடரில் கிசான் கிரெடிட் கார்டு கடன் வரம்பை இன்னும் அதிகரிக்கலாம் எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

இந்த கிசான் கிரெடிட் கார்டு கடன் வட்டி விகிதம் என்பது வாங்கிய கடனுக்கு 7 சதவீதம் வட்டி வசூலிக்கப்படுகிறது. ஒருவேளை விவசாயி தான் பெற்ற கடனை ஓராண்டுக்குள் திருப்பி செலுத்தி விட்டால் வெறும் 4% வட்டி மட்டுமே செலுத்தினால் போதும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top