Connect with us

ஐபிஎல் காரசாரம்: முதல் வெற்றி கிடைக்குமா? தொடர் வெற்றி தொடருமா?

ஐபிஎல்

விளையாட்டு

ஐபிஎல் காரசாரம்: முதல் வெற்றி கிடைக்குமா? தொடர் வெற்றி தொடருமா?

ஐபிஎல் காரசாரம்: முதல் வெற்றி கிடைக்குமா? தொடர் வெற்றி தொடருமா?

தற்போது கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகவும் திருவிழாவான கிரிக்கெட் தொடர் ஒன்று நடைபெற்று வருகிறது. அதன்படி ஐபிஎல் கிரிக்கெட் போட்டி கடந்த வாரம் தொடங்கியது. கடந்த வாரம் முதல் போட்டியிலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பலப்பரீட்சை மேற்கொண்டன.

இதில் தல டோனி 50 ரன் அடித்து களத்திலேயே இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும் வெற்றி என்னமோ கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தான் பெற்றுள்ளது. இவ்வாறுள்ள நிலையில் இன்றைய தினம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பலமான ஓரணியோடு பலப்பரீட்சை மேற்கொள்ள உள்ளதாக காணப்படுகிறது.

அதன்படி கொல்கத்தா அணி இன்று இரவு 07:30 மணிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை மேற்கொள்கிறது. இந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் புதிய கேப்டனாக டியூ பிளஸ் சிஸ் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதல் ஆட்டத்தில் 200 ரன்னுக்கு மேல் அடித்து இருந்தாலும் பெங்களூர் அணி தோற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் ஐபிஎல்லில் முதல் வெற்றியை பதிவு செய்யுமா? அல்லது தொடர்ந்து வெற்றி மழையில் கொல்கத்தா அணி நனையுமா என்பது இன்று மாலை நடக்கின்ற மேட்சில் பார்க்கலாம்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in விளையாட்டு

To Top