இலவச வாக்குறுதி பாதிப்பை ஏற்படுத்துமா? வாக்காளர்களே தீர்மானிக்க வேண்டும்!!
நேற்றைய தினம் பாஜக கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் தேர்தல் வாக்குறுதிக்கு முன்பாக அறிவிக்கப்படும் இலவச வாக்குறுதிகளை நிறுத்த வேண்டும் என்று மனு தாக்கல் செய்திருந்தார். இதனால் வெற்றி பெற்றபின் மாநிலத்தின் நிதி பற்றாக்குறை ஏற்படுகிறது என்றும் அவர் கூறியிருந்தார்.
இந்த நிலையில் நேற்று தேர்தல் ஆணையம் இதனை மறுத்து இருந்தது. இது குறித்து சில முக்கிய தகவல்களையும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி தேர்தலுக்கு முன்பும் பின்பும் இலவசங்களை அறிவிப்பது அரசியல் கட்சிகளின் கொள்கை முடிவு என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இலவசங்கள் ஏற்புடையவை, மாநிலத்தில் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்துமா என்பதை வாக்காளர்களே தீர்மானிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. இலவசங்களை ஒழுங்கு படுத்தும் அதிகாரம் தங்களுக்கு இல்லை என உச்சநீதிமன்றத்தில் கூறியுள்ளது இந்திய தேர்தல் ஆணையம்.
பாஜக மூத்த தலைவரும் வழக்கறிஞருமான அஸ்வினி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. தேர்தல் நேரத்தில் இலவசமாக அறிவிக்கும் கட்சியின் பதிவை ரத்து செய்ய, சின்னத்தை முடக்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார். அஸ்வினி சார்பில் தாக்கல் செய்த மனு மீது பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. சட்டத்தில் இடம் இல்லாத நிலையில் இலவசங்களை ஒழுங்குபடுத்துவது அதிகார மீறலாக இருக்கும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
இலவச வாக்குறுதி தேர்தல் விதிக்குப்பட்டது என்ற உறுதிமொழியை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
